இணைய மோசடியில் இழந்த பணத்தை விரைவில் மீட்க புதிய திட்டம் அறிமுகம்

இணைய மோசடியில் இழந்த பணத்தை விரைவில் மீட்க புதிய திட்டம் அறிமுகம்

2 mins read
3e5398c0-8a08-48ec-9cfe-c1f14e9e902f
இணைய மோசடிப் புகார்களை விரைவில் பதிவுசெய்து நடவடிக்கை எடுப்பதற்காக புதிய திட்டத்தைத் தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சென்னை: இணையம் வழியாக மோசடியில் இழந்த பணத்தை விரைவில் மீட்பதற்கு உதவியாக ‘இ-ஜீரோ எஃப்​ஐஆர்’ என்ற புதிய முறையைத் தமிழகக் காவல்​துறை அறி​முகம் செய்​துள்​ளது.

இன்​றைய மின்னிலக்க யுகத்​தில், இணையம்வழி பணப் பரிவர்த்​தனை​கள் எளிதில் மேற்கொள்ளப்படுகின்றன. அதே வேளையில் இணை​ய​வழி நிதி மோசடிகளும் அதி​கரித்து வரு​கின்​றன.

பகுதிநேர வேலை வாய்ப்பு மோசடி, மின்னிலக்க கைது மோசடி மிரட்டல், போலிக்கடன் செயலி, யுபிஐ மற்​றும் வங்கி கேஒய்சி மோசடி என பல்​வேறு வடிவங்​களில் இணையக் குற்​றங்​கள் அதி​கரித்து வரு​கின்​றன.

இந்​நிலை​யில், இணையவழி நிதி மோசடிப் புகார்​களை விரைவில் பதிவு செய்​து, இழந்த பணத்தை மீட்​கும் நடவடிக்​கைகளை வலுப்​படுத்த தமிழக காவல்​துறை புதிய திட்​டத்தை அறி​முகப்​படுத்தி உள்​ளது.

இதுகுறித்து தமிழக காவல்​துறை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், மத்​திய உள்​துறை அமைச்​சின் வழி​காட்​டு​தலின்​படி, 1930 என்ற உதவி எண்​ணுடன் இந்தப் புதிய வசதி ஒருங்​கிணைக்​கப்​பட்​டுள்​ளது. இணைய மோசடி​யில் பணத்தை இழந்தவர்​கள் உடனடி​யாக 1930 என்ற எண்ணில் அழைத்து புகார் தெரிவிக்க வேண்​டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1 லட்​சத்​துக்​கும் அதி​க​மான நிதி மோசடிப் புகார்​கள், குற்​றம் மற்​றும் குற்​ற​வாளி​கள் கண்காணிப்பு வலை​யமைப்​புடன் தானாகவே ஒருங்​கிணைக்​கப்​பட்டு ‘இ - ஜீரோ எஃப்​ஐஆர்’-ஆகப் பதிவு செய்​யப்​படும்.

பின்​னர், புகார் அளித்​தவருக்​கு, ‘இ - ஜீரோ எஃப்​ஐஆர்’ பதிவு செய்​யப்​பட்ட விவரம் குறுஞ்செய்​தியாக அனுப்பிவைக்கப்படும். புதிய சட்ட விதி​களின்​படி, புகார்​தா​ரர் தனது புகாரை உறு​திப்​படுத்த, குறிப்​பிட்ட காவல் நிலை​யத்​தில் மூன்று நாள்​களுக்​குள் நேரில் முன்னிலையாக வேண்​டும்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

புகார்​தா​ரர் நேரில் முன்னிலையாகி உறு​திப்​படுத்​தி​யதும் அந்த ‘இ - ஜீரோ எஃப்​ஐஆர்’ விவரம் அதி​கார வரம்​புடைய காவல் நிலை​யத்​துக்கு மாற்​றப்​பட்​டு வழக்​க​மான எஃப்​ஐஆர்-ஆகப் பதி​வு செய்யப்படும்.

இம்​முறை​யில் தகவல்​கள் உடனுக்​குடன் பரி​மாறப்​படு​வ​தால், மோசடி செய்​பவர்​களின் வங்கிக் கணக்கை விரை​வாக முடக்க முடி​யும் என்று தமிழகக் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
தமிழ்நாடுகாவல்துறைநிதி மோசடி