புத்தாண்டுக் கொண்டாட்டம்; தமிழகக் காவல்துறை முக்கிய அறிவிப்பு

1 mins read
2779b2c4-8ffa-4de3-8dbd-c9a1afc08d51
டிசம்பர் மாதம் 31ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் நீச்சல் குளங்களில் நீந்த அனுமதி வழங்கக்கூடாது என்று ஹோட்டல்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதியில் இரவு 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது எனத் தனியார் நட்சத்திர ஹோட்டல்களுக்கு தமிழ்நாட்டு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பது போல் பெண்களுக்குத் தொல்லை விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டிசம்பர் மாதம் 31ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் நீச்சல் குளங்களில் நீந்த அனுமதி வழங்கக்கூடாது என்று ஹோட்டல்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடற்கரை உல்லாசத் தளங்களில் தங்குபவர்கள் இரவு 12 மணிக்கு மேல் அறைகளைவிட்டு வெளியே வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, ஹோட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளின் வரவேற்பு அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் கண்டிப்பாக இயங்க வேண்டும் என்றும் நினைவூட்டப்பட்டுள்ளது.

மேலும், அடையாள அட்டையைக் காட்டாதவர்களுக்கு அறைகள் கொடுக்கக்கூடாது என்று காவல்துறை கண்டிப்பாகக் கூறிவிட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவைபோன்ற பல அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்