இலவசம் வேண்டாம்: ஆட்டோ ஓட்டுநரின் விழிப்புணர்வுப் பிரசாரம்

இலவசம் வேண்டாம்: ஆட்டோ ஓட்டுநரின் விழிப்புணர்வுப் பிரசாரம்

1 mins read
bc9d75ca-f441-4020-bb99-26ac828c4c2c
முருகனின் விழிப்புணர்வுப் பிரசாரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. - படம்: தினமலர்
Google News Preferred Icon

திண்டுக்கல்: தமிழகத்தில் நல்லாட்சி மலர வேண்டுமானால் வாக்காளர்கள் பணம் பெற்றுக்கொண்டு தங்கள் வாக்குகளை விற்கக் கூடாது என திண்டுக்கல்லைச் சேர்ந்த முருகன் என்ற ஆட்டோ ஓட்டுநர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

47 வயதான அவர், தனது ஆட்டோவின் பின்பகுதியில், ‘கல்வி, மருத்துவம் தவிர வேறு எதுவும் இலவசமாக வேண்டாம், வேலைவாய்ப்புதான் வேண்டும்’ என்ற வரிகள் அடங்கிய சிறு பதாகை ஒன்றை வைத்துள்ளார்.

கேரளாவில் முதல் வகுப்பு தொடங்கி, உயர் கல்விவரை இலவசம் என்ற வாக்குறுதியை முதல்வர் பினராயி விஜயன் நிறைவேற்றிவிட்டதாகக் கூறியுள்ள முருகன், தமிழக மக்களிடம் எதை இலவசமாகப் பெறவேண்டும் என்பதில் பெரிய குழப்பம் நிலவுவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் பல்வேறு இலவச அறிவிப்புகளை அறிவித்து, பல தலைமுறைச் சந்ததியினரின் சுயசார்பு வாழ்க்கையை மண்ணோடு மண்ணாகப் புதைத்துவிட்டதாக முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வசதியானவர்களுக்கும்கூட உரிமைத்தொகை கிடைத்துவிட்டது என்றும் தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும் குரலெழுப்பி நூதனமாக லஞ்சம் பெற சண்டை போடும் மனோபாவம்தான் தமிழகத்தில் நிலவுகிறது என்று முருகன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அவர் மேற்கொண்டுள்ள இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்