தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆளுநருடன் இனி கருத்து மோதல்கள் ஏற்படாது: அமைச்சர் உறுதி

1 mins read
e63c6671-dae0-44f1-93f4-e0025e3c4b32
கோவை செழியன் - படம்: ஊடகம்

சென்னை: தமிழக ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே இனி எந்தவித கருத்து மோதல்களும் ஏற்படாது என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவை செழியன் தெரிவித்துள்ளார்.

ஆளுநருடன் மோதல் போக்கு கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தமக்கு அறிவுறுத்தியுள்ளதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

துணை வேந்தருக்கான தேர்தல் குழுவில் பல்கலைக்கழக மாநிலக் குழு உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்ற ஆளுநரின் கோரிக்கையை ஏற்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார் அமைச்சர்.

“தமிழக அரசு எப்போதும் சரியான பாதையில் சென்று, சட்டவிதிகளுக்கு உட்பட்டுத்தான் எதையும் செய்யும். முரண்பாடு, மோதல் தேவையில்லை. மாணவர்களின் நலன் காக்க என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பது குறித்து முதல்வர் எனக்கு அறிவுறுத்தியுள்ளார்.

“எனவே மாநில உரிமை, தமிழக அரசின் கல்வி தொடர்பான நிலைப்பாடு, உயர்கல்விக் கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் நமது செயல்பாடுகள் அமையும். ஆளுநருடனான முட்டல், மோதல் என்பது தமிழக அரசால் உருவாக்கப்படுவதில்லை.

“தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதல்வரும் உயர்கல்வித் துறையினரும் உறுதுணையாக இருப்போம். துணை வேந்தர் நியமனத்தில் முரண்பாடுகள் களையப்பட்டு விரைவில் புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்டுவார்கள்,” என்று அமைச்சர் கோவை செழியன் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்