தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விளைச்சல் இருந்தும் விலை இல்லை; நிலத்திலேயே தர்பூசணி அழிப்பு

1 mins read
bd68e943-ccc6-4b66-89b6-eb9039a0a711
வாகனங்களில் வந்து தர்பூசணிப் பழங்களை அள்ளிச் சென்ற மக்கள். - படம்: தமிழக ஊடகம்

உசிலம்பட்டி: உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் இருவர் 20 ஏக்கரில் பயிரிட்டிருந்த தர்பூசணிகளை நிலத்திலேயே அழித்த சம்பவம் தமிழகத்தின் உசிலம்பட்டி மாவட்டத்தில் நிகழ்ந்தது.

கருமாத்தூர் கேசவம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் 15 ஏக்கரிலும் முத்துராமன் என்பவர் 5 ஏக்கரிலும் தர்பூசணி பயிரிட்டிருந்தனர்.

அவர்கள் ஏக்கருக்கு ரூ.2 லட்சம் செலவிட்ட நிலையில், கிலோ 5 ரூபாய் என்ற விலையில்கூட யாரும் கொள்முதல் செய்ய முன்வரவில்லை எனக் கூறப்பட்டது. இதனால் அவர்களால் அறுவடைக் கூலிகூட தரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அறுவடை செய்யாவிடில் பழங்கள் அழுகி, சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் என்பதால் அவர்கள் இருவரும் பழங்களை நிலத்திலேயே அழித்தனர். மீதியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர்.

தகவலறிந்த சுற்றுவட்டார மக்கள் வாகனங்களில் சென்று தர்பூசணிப் பழங்களை அள்ளிச் சென்றனர்.

குறிப்புச் சொற்கள்