பணம் கொடுத்தால் வாக்கில்லை: கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு

பணம் கொடுத்தால் வாக்கில்லை: கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு

1 mins read
654219ca-cd26-4848-a0d3-14c5cf11efaa
கிராமப் பஞ்சாயத்தார்கள், பொதுமக்கள் சார்பாக ஊருக்குப் பொதுவான இடத்தில் மின்னிலக்கப் பதாகையை நிறுவியுள்ளனர். - படம்: தினமலர்

காரைக்கால்: பொதுத்தேர்தல் நடைபெறும் வேளையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்துவதும் தேர்தலைப் புறக்கணிப்பதும் வாடிக்கையானதுதான்.

ஆனால், முதன்முறையாக வாக்களிக்கப் பணம் கொடுத்தால் தேர்தலைப் புறக்கணிப்போம் எனப் புதுவை மக்கள் அறிவித்துள்ளனர்.

புதுவையில் ஏப்ரல் 9ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவக் கிராமமான கிளிஞ்சல்மேடு செட்டியார் கிராமத்தில்தான் இந்த எச்சரிக்கையுடன்கூடிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கிராமப் பஞ்சாயத்தைச் சேர்ந்தோர், பொதுமக்கள் சார்பாக ஊருக்குப் பொதுவான இடத்தில் மின்னிலக்கப் பதாகையை நிறுவியுள்ளனர்.

‘எச்சரிக்கின்றோம்’ என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ள அந்தப் பதாகையில், இக்கிராமத்தினருக்கு யாரும் வாக்களிக்கப் பணமோ, பொருளோ வழங்கக்கூடாது என்றும் இதையும் மீறி வழங்கினால் ஊர் கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கள் வாக்குகளுக்கு வேட்பாளர்கள் விலை பேசக்கூடாது என்று வலியுறுத்தியுள்ள இக்கிராம மக்கள், தங்கள் வாழ்வாதாரத்துக்கு ஏதேனும் வழி செய்துகொடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.

பணம் கொடுக்கும் வேட்பாளரைப் புறக்கணிக்க வேண்டும் என இம்மக்கள் மேற்கொண்டுள்ள பிரசாரம், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பேசுபொருளாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்