சென்னையில் ‘நோக்கியா’ ரூ. 270 கோடி முதலீடு

சென்னையில் ‘நோக்கியா’ ரூ. 270 கோடி முதலீடு

2 mins read
66d9a976-3f39-464f-aef2-e8bad477840d
 டிஆர்பி ராஜா. - படம்: தி ஃபெடரல்

சென்னை: முன்னணி நிறுவனங்களில் ஒன்றான நோக்கியா சென்னையில் ரூ.270 கோடி முதலீடு செய்ய உள்ளதாக தமிழகத் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

நிலையான ஆராய்ச்சி, மேம்பாட்டு வசதிக்காக நோக்கியா நிறுவனம் தமிழகத்தை அணுகியுள்ளதாக அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய நடவடிக்கையின்மூலம் தொலைத்தொடர்பில் தமிழகத்தின் தலைமை வலுப்படுகிறது என்றும் நோக்கியா சென்னை சிப்காட் சிறுசேரியில் தனது புதிய ஆராய்ச்சி, மேம்பாட்டு மையத்தை திறக்கிறது என்றும் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

ஆராய்ச்சி, மேம்பாட்டு நடவடிக்கைகள் சார்ந்த முதலீட்டாளர்களில் நோக்கியா நிறுவனமும் முக்கியமான நிறுவனம் என்று திரு ராஜா குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே கடந்த 1997ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 1,000க்கும் மேற்பட்ட பொறியாளர்களை நோக்கியா நிறுவனம் பணி அமர்த்தி இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டிஆர்பி ராஜா, முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட அமெரிக்கச் சுற்றுப்பயணத்தின்போது கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து இந்தப் புதிய விரிவாக்கம் தொடங்குவதாக தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக ரூ.220 கோடி முதலீடு செய்யப்படும் என்று உறுதியளித்திருந்த நோக்கியா நிறுவனம், தற்போது அதை ரூ.270 கோடியாக உயர்த்தியுள்ளது.

இரண்டாம் கட்டமாக, நோக்கிய ஏறக்குறைய ரூ.300 கோடி முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் ராஜா மேலும் கூறியுள்ளார்.

நோக்கியா நிறுவனத்தின் முதலீட்டின் மூலம் புதிதாக நூற்றுக்கணக்கில் வேலை வாய்ப்புகள் உருவாகும் என கூறப்படுகிறது.

தமிழகம் தொழில்துறையில் கண்டு வரும் முன்னேற்றத்துக்கு இந்த முதலீடு நல்ல சான்றாக அமைந்துள்ளது என அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்