தமிழகத்தில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 52 ஆனது

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 52 ஆனது

1 mins read
8e7a2589-ddeb-411a-96b4-73efbb02b7a8
புதிதாக மூன்று சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டு உள்ளன. - கோப்புப் படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

விழுப்புரம்: தமிழகத்தில் கூடுதலாக 3 புதிய சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் நங்கிளிகொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி ஆகிய 3 இடங்களில் அவை திறக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சுங்கச்சாவடிகளில் ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ல் போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும் 2008ல் போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளுக்கு கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

தேசிய நெடுஞ்சாலைகள் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளன.

அந்த அமைச்சுதான் நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சுங்கக் கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்