‘பழைய நாணய விளம்பர மோசடி’: காவல்துறை எச்சரிக்கை

‘பழைய நாணய விளம்பர மோசடி’: காவல்துறை எச்சரிக்கை

1 mins read
82ea14b9-f911-456a-ab2e-47616f87f900
திருநெல்வேலி மாவட்டத்தில் ‘பழைய நாணய விளம்பர மோசடி’ அதிகரித்து வருவதாக அந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். - எஸ்பிஎச்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் ‘பழைய நாணயங்களை வைத்து அதிக பணம் சம்பாதிக்கலாம்’ என்ற மோசடி நடைபெற்று வருகிறது. எனவே, மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட இணையக் குற்றத்தடுப்புக் காவல்நிலையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “பழைய நாணயங்களை வைத்து அதிக பணம் சம்பாதிக்கலாம்,” என்ற மோசடிச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இணையம் வழி பொருள்கள் வாங்குபவரையே இந்தக் கும்பல் குறிவைத்துள்ளது தெரியவந்துள்ளது.

ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பழைய நாணயங்கள் மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தால் அதன் மதிப்பு பல ஆயிரங்கள் முதல் பல லட்சங்களில் இருக்கிறது என நம்பவைத்து தெரியாத சமூக வலைத்தளங்களில் இருந்து விளம்பரங்கள் வரலாம். அவற்றை நம்பி, அதில் அதிகப் பணம் ஈட்ட எண்ணுவோர் அதிலுள்ள தொடர்பு எண்களிலோ, மின்மடலிலோ தொடர்புகொள்வர். அப்போது, அவர்களிடம் இருந்து, டாக்குமெண்ட் கட்டணம், விநியோகக் கட்டணம், ஜிஎஸ்டி என பல வகையான கட்டணங்களைக் கட்டி உங்கள் லாபத்தை உறுதி செய்யுங்கள் என்று கூறுவர். அதை உண்மை என நம்பி பணம் அனுப்பி ஏமாறவேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்