சென்னை: ரயில்களில் கூடுதலாக எடுத்துச் செல்லப்படும் பயண உடைமைகளுக்குக் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து அதன் நிர்வாகம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், 10 முதல் 15 கிலோ வரை கூடுதலான பயணப் பொருள்களைக் கொண்டு செல்ல ஒன்றரை மடங்கு கூடுதல் தொகை வசூலிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“படுக்கை வசதி கொண்ட ரயிலில் பயணம் செய்யும் ஒவ்வொருவரும் தலா 40 கிலோ பொருள்களைக் கொண்டு செல்லலாம்.
“குளிர்சாதன வசதியுள்ள ரயில் பெட்டிகளில் 50 கிலோ முதல் 70 கிலோ எடையுள்ள பயணப் பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதி உண்டு,” எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தியாவில் வெடி பொருள்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய, வேதிப் பொருள்களை ரயில்களில் கொண்டு செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.