சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து அண்மை காலமாகப் பொறுப்பாளர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் எனப் பலர் விலகி வெவ்வேறு கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். கட்சியில் இருந்து விலகுபவர்கள் அனைவரும் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிச் செயலாளராகப் பதவி வகித்த மகேந்திரன் விலகியுள்ளார்.
மேடையில் சமூகநீதி பேசும் சீமான், கட்சியில் அதைக் கொன்றுவிட்டதாக மகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். 2019ஆம் ஆண்டில் திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் நா.த.க. சார்பில் போட்டியிட்டு மகேந்திரன் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.