கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் ஒரு கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
21 வயது கல்லூரி மாணவி திரிஷ்யாவை அவருடன் படித்த பள்ளி நண்பர் 21 வயது வினீஷ் வினோத் ஒருதலையாக காதலித்து வந்தார்.
வினோத் சட்டக்கல்வி பயின்று வரும் மாணவர்.
திரிஷ்யா எங்கு சென்றாலும் அவரை வினோத் பின் தொடர்ந்து வந்தார்.
இது குறித்து திரிஷ்யா தம் தந்தையிடம் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் திரிஷ்யாவின் தந்தை இது குறித்து போலீஸ் புகார் செய்தார்.
இதனால் கோபம் அடைந்த வினோத் கடந்த 16ம் தேதி திரிஷ்யாவின் தந்தை நடத்திவந்தக் கடைக்கு தீவைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வினோத் நேற்று காலை திரிஷ்யாவின் வீட்டுக்கு சென்று உள்ளார்.
வீட்டின் கீழ் பகுதி பூட்டப்பட்டு இருந்தது.
கதவை உடைத்து திறந்து உள்ளே சென்ற வினோத், மேல் மாடியில் இருந்த திரிஷ்யாவை கத்தியால் குத்தினார்.
அதை தடுக்க வந்த திரிஷ்யாவின் சகோதரி தேவஸ்ரீக்கும் கத்திகுத்து விழுந்தது.
திரிஷ்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தேவஸ்ரீ உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தப்பிக்க முயன்ற வினோத்தை ஆட்டோ ஓட்டுனர் பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

