தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரபலங்கள் படங்களைப் பயன்படுத்தி இணைய மோசடி: காவல்துறை எச்சரிக்கை

1 mins read
2e0f9878-f36b-4e37-9373-fd40ec59ccee
பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல், மாநிலங்களவை சுதாமூர்த்தி போன்ற பிரபலங்களின் படங்களுடன் பரபரப்பு செய்தி பதிவிடப்படுகிறது.  - படம்: ஊடகம்

சென்னை: பிரபலங்களின் படங்களுடன் பரபரப்பான தலைப்புகளுடன் கூடிய செய்திகளை வெளியிட்டு சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு மோசடிகள் நிகழ்ந்து வருவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, பங்கு வர்த்தகம், மின்னிலக்கப் பணம் (கிரிப்டோகரன்சி) தொடர்பான இத்தகைய பதிவுகளை நம்பிவிட வேண்டாம் என காவல்துறையின் இணையக் குற்றப்பிரிவு பொதுமக்களை எச்சரித்திருக்கிறது.

“பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல், மாநிலங்களவை சுதாமூர்த்தி போன்ற பிரபலங்களின் படங்களுடன் பரபரப்பு செய்தி பதிவிடப்படுகிறது. அதிபர், பிரதமர் உள்ளிட்டோர் படங்களைப் பயன்படுத்திகூட இணைய மோசடிகள் நடக்கின்றன.

“எனவே சந்தேகத்திற்கு இடமான இணைப்புகள் அல்லது தகவல்களை வருடுவதோ, கிளிக் செய்வதோ தவிர்க்கப்பட வேண்டும்,” என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

இணையத் குற்றங்களில் ஈடுபடும் பல்வேறு போலி தளங்களைக் கண்டறிந்து நீக்கியுள்ளதாகவும் மோசடியால் பாதிக்கப்பட்டு இருந்தால், இணையத்தளம் மூலம் உடனடியாக புகார் அளிக்கலாம் என்றும் ஓர் அறிக்கையில் காவல்துறை மேலும் கூறியுள்ளது.

பொதுவாக, புதிய தொழில் நுட்பத்தின் உதவியோடு அரங்கேறும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்