சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்திய புகாரில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து அஜேஷ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
எவ்வித நடவடிக்கையையும் எடுக்கப்படாத நிலையில், மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்திடம் சீமான் குறித்து அவர் புகார் அளித்தார்.
சீமான் அவதூறாகப் பேசியது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையருக்கு மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

