பருவமழைக்கு முன்பாகச் சாலைப் பணிகளை முடிக்க உத்தரவு

பருவமழைக்கு முன்பாகச் சாலைப் பணிகளை முடிக்க உத்தரவு

1 mins read
b331da67-f94a-402a-80bd-4c902c3605fa
தற்​போது தமிழகம் முழு​வதும் 500 சாலைகளில் பணி​கள் நடைபெறுகின்​றன. இவற்றில், 200 சாலைத் திட்​டப்​ பணி​கள் 70 விழுக்காடு நிறைவடைந்​துள்​ளன. - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: வடகிழக்குப் பரு​வ​மழைக்கு முன்பு சாலைகள் பராமரிப்பு, மேம்​பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க, அனைத்துத் தரப்புப் பொறி​யாளர்​களுக்​கும் தமிழக மாநில நெடுஞ்​சாலைத்​துறை உத்​தர​விட்​டுள்​ளது.

அண்மையில், சாலைப் பணி ஒப்​பந்​த​தா​ரர்​களு​டன் நெடுஞ்​சாலைத்​துறை அதி​காரி​களின் ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது.

அக்​கூட்​டத்​தில் வடகிழக்குப் பரு​வ​மழை அடுத்த மாதம் தொடங்​க​வுள்ள நிலை​யில், அதற்கு முன்​பாகச் சாலைப் பணி​களை முடிக்க முடிவெடுக்கப்பட்டது.

“தற்​போது மாநிலம் முழு​வதும் 500 சாலைகளில் பணி​கள் நடை​பெறுகின்​றன. இவற்றில், 200 சாலைத் திட்​டப்​ பணி​கள் 70 விழுக்காடு நிறைவடைந்​துள்​ளன. எஞ்​சிய சாலைப் பணி​கள் 50 விழுக்காடு முடிந்​துள்​ளன. அனைத்துப் பணி​களும் விரைந்து முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்குக் கொண்​டு வரப்படும். பணி​களைக் கண்​காணிக்கத் தலைமைப் பொறியாளர்​கள் தலை​மை​யில் குழுக்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன,’’ என நெடுஞ்சாலைத் துறை அதி​காரி​கள்​ கூறினர்​.

தமிழக நெடுஞ்​சாலைத் துறை​யின்கீழ், மாவட்டங்களின் முக்​கியச் சாலைகள், இதரச் சாலைகள் என 70,000 கிலோமீட்டர் தொலை​வுக்குச் சாலைகள் உள்​ளன. அவற்றில், மாவட்ட இதரச் சாலைகள் மட்​டுமே 45,000 கிலோமீட்டர் தொலை​வுக்கு உள்​ளன.

அச்​சாலைகளைப் பராமரிக்​க​வும் மேம்​படுத்​த​வும் தமிழகம் முழு​தும் 68 இடங்​களில் அலுவல​கங்​கள் உள்​ளன.

இவற்​றின் வாயி​லாக, ஒப்​பந்​த​தா​ரர்​கள் தெரிவுசெய்​யப்​பட்​டு, சாலைப் பராமரிப்பு, மேம்பாட்டுப் பணி​கள் நடை​பெறுகின்​றன.

குறிப்புச் சொற்கள்
சாலைநெடுஞ்சாலைபணி

தொடர்புடைய செய்திகள்