தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு

1 mins read
d1feeb83-8dc2-43e5-a635-22de8b98c90f
பெ. சண்முகம். - படம்: ஊடகம்

சென்னை: தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அக்கட்சியின் 24வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது புதிய மாநிலச் செயலாளராக சண்முகம் தேர்வானார். மேலும், மாநில செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், மத்திய அரசின் தாராளமய பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக வலிமைமிக்க போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக குறிப்பிட்டார்.

64 வயதான பெ.சண்முகம், திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் உள்ள பெருவளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

பட்டியலின சமூகத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர். விவசாயச் சங்கங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். தமிழக அரசின் அம்பேத்கர் விருதும் பெற்றுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாளவன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய செயலாளர் பெ.சண்முகத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்