சேலம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டம் 1,000வது நாளை எட்டியது.
இதையடுத்து, ஏகனாபுரம் கிராமத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்ற பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், பரந்தூர் விமான நிலையத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், நீர் நிலைகள் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும் விளக்கினர்.
சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.