ஆணையருக்காக சோகத்தில் மூழ்கிய கோவை மக்கள்

1 mins read
96c9916e-d7be-4dc6-9bc6-abb7f1ac2322
சென்னைக்கு வேலை மாற்றம் பெற்றிருக்கும் கோவை ஆணையர் பால கிரு‌‌ஷ்ணன். - படம்: ஊடகம்

கோவை: கோவை மாவட்டக் காவல் ஆணையராக இருந்த பால கிருஷ்ணன் சென்னைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் கோவை மாவட்ட மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

இவர் கோவை மாவட்டத்தில் பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து முதல் அனைத்தையும் சீர்படுத்தியதோடு பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு என பல்வேறு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வந்தார்.

மேலும் வளர்ந்து வரும் நகரமான கோவை மாவட்டத்தில் சிக்னல் இல்லா போக்குவரத்தைக் கொண்டு வந்து தமிழகத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாய் விளங்கினார்.

தன்னோடு வேலை செய்யும் காவலர்கள் மன நிம்மதியுடன் இருக்க வேண்டும் என அவர்களுக்கு வாரந்தோறும் விடுமுறை, சிறப்பு யோகா பயிற்சி என பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார்.

மேலும் பொதுமக்கள் தன்னை நேரடியாக சந்திக்கவும் வாய்ப்பு அளித்ததோடு அவர்களின் குறைகளைக் கேட்டு அவற்றை நிவர்த்தி செய்ததுடன் விலங்குகள் மேல் அதீத பாசம் கொண்டவராக இருந்தார்.

இந்நிலையில் பாலகிருஷ்ணன் கோவை மாநகரக் காவல் ஆணையர் பதவியில் இருந்து சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டதால் கோவை மக்கள் இப்படிப்பட்ட ஆணையர் இனி கிடைப்பாரா என்ற ஏக்கத்துடன் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்