வேலூர்: மீன் ஏற்றிச் சென்ற வேன் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் சாலையில் கொட்டிய மீன்களை மக்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன், 28.
இவர் விஜயவாடாவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு இரண்டு டன் கடல் மீன்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வேன் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த அகரம் சேரி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அதன் டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
அப்போது வேனில் இருந்த மீன்கள் சாலையில் கொட்டின.
அதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பைகளிலும் பாத்திரங்களிலும் அள்ளிச் சென்றனர்.
அது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டன.
தகவல் அறிந்து வந்த பள்ளிகொண்டா காவல்துறையினர் மீன்களை அள்ளிக் கொண்டிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

