விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பனை கனவுத் திருவிழாவில் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
அங்குள்ள நரசிங்கனூர் பகுதியில் நடந்த திருவிழாவில், அழிந்துவரும் பனை மரங்களால் கிடைக்கக்கூடிய பல்வேறு நன்மைகளை விவரிக்கும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பனையால் கிடைக்கும் நுங்கு, பதநீர், கருப்பட்டி, பனை ஓலையால் பின்னப்பட்ட விசிறி, அணிகலன்கள், கைவினைப் பொருள்கள் ஆகியவை இடம்பெற்ற இக்கண்காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
திருவிழாவின் ஓர் அங்கமாக, நரசிங்கனூர் மக்கள் பதநீர் உள்ள குடங்களைத் தலையில் சுமந்து வந்து, பனை மரத்தின் முன்பு வைத்து படையலிட்டு வழிபட்டனர்.
இந்தத் திருவிழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.