செங்கோலை மீட்டெடுத்த மோடிக்கு மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள் - ஆளுநர் ரவி

1 mins read
0f4aa4bc-5397-4750-811f-6e835cdcc3fa
சாவர்க்கர் பிறந்த நாளை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீலகிரி ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். - படம்: எக்ஸ் தளம், ஆளுநர் மாளிகை.

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். செவ்வாய்க்கிழமை சாவர்க்கர் பிறந்தநாளை ஒட்டி, ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்தப் புகைப்படத்தை ஆளுநர் மாளிகையின் எக்ஸ் பக்கத்தில், “பாரதத் தாயின் மிகச்சிறந்த மகனான சுதந்திர வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதைகள். பத்தாண்டுகளுக்கும் மேலாக அந்தமான் செல்லுலார் சிறையிலும், 16 ஆண்டுகள் ரத்னகிரி சிறையிலும் ஆங்கிலேயர்களால் உடலாலும் மனதாலும் சித்திரவதைகளை மிகவும் கொடூரமாக அனுபவித்த அவர் ஒரு உறுதியான சுதந்திர போராட்ட வீரர் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “செங்கோலை மீட்டெடுத்ததை நாடு பெருமிதத்துடன் கொண்டாடுகிறது. செங்கோலை மீண்டும் உயர்ந்த தேசிய பீடத்தில் நிலைநிறுத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்,” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு சமூக ஊடகவாசிகள் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்