தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை - சிங்கப்பூர் விமானத்தில் எரிபொருள் கசிவு; 145 பயணிகள் உயிர் தப்பினர்

1 mins read
41838ae3-ae46-4d96-9531-aff326bd47a3
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்குப் புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் அதிலிருந்து 145 பயணிகள் உயிர் தப்பினர். - படம்: ஊடகம்

சென்னை: சென்னையிலிருந்து புதன்கிழமை காலை 11.25 மணிக்கு ஏர் இந்தியா விமானம் (ஏஐ-346 விமானம்) சிங்கப்பூருக்குப் புறப்படத் தயாராக இருந்தது.

145 பயணிகள் இருந்த அந்த விமானத்தில், விமானம் புறப்படுவதற்கு முன்பு இறுதிக்கட்டப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது விமானத்தில் பெட்ரோல் கசிவது கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து, விமானி விமானத்தின் இயக்கத்தை நிறுத்திவிட்டு கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, அங்கு விரைந்து வந்த தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்புக் குழுவினர், விமானத்தில் ஏற்பட்ட கோளாற்றைக் கண்டுபிடித்துச் சரிசெய்தனர்.

தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் விமானம் புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதைக் கண்டறிந்து சரியான நேரத்தில் விமானத்தை விமானி நிறுத்தியதால் 145 பயணிகள் உயிர் தப்பினர்.

குறிப்புச் சொற்கள்