பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த ‘இளஞ்சிவப்பு ஆட்டோ’ திட்டம்

1 mins read
ab226949-c6d4-4dcd-b511-4e55223ee929
இத்திட்டத்தின்கீழ் 250 ஆட்டோக்கள், பெண் ஓட்டுநர்கள் மூலம் சென்னையில் இயக்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்’ என்ற புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இத்திட்டத்தின்கீழ் 250 ஆட்டோக்கள், பெண் ஓட்டுநர்கள் மூலம் சென்னையில் இயக்கப்படும் என்றும் பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் புதிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் புதிய ஆட்டோ வாங்க, அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று சமூக நல ஆணையர் அறிவித்துள்ளார்.

இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்