முதல்வர் ஸ்டாலினைக் கண்டித்து பாமகவினர் போராட்டம்

முதல்வர் ஸ்டாலினைக் கண்டித்து பாமகவினர் போராட்டம்

1 mins read
bcc227a3-7950-419c-ad42-fb159f44d815
கைது செய்யப்பட்ட பாமகவினர். - படம்: ஊடகம்

விழுப்புரம்: பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் குறித்து சென்னையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘வேறு வேலை இல்லாததால் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கும் ராமதாசுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, திரு.ராமதாஸ் குறித்து முதல்வர் ஸ்டாலின் இழிவாகப் பேசியதாகக் கூறி, பாமகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அக்கட்சியினர் கைதாகினர்.

இதேபோல், சிதம்பரம் பகுதியில் பேருந்துகள் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது.

“முதல்வர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரை விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழையவிட மாட்டோம்,’‘ என்று பாமக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்