தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிட பாமக வலியுறுத்து

1 mins read
a21aadf6-2864-46f4-b952-d06771cbbc03
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: மத்திய பெட்​ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்​சின் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தின்கீழ் ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் தென் தமிழகத்தின் ஆழ்கடல் பகுதிகளும் இடம்பெற்றுள்ளது. இது அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது என்று பட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மருத்துவர் ராமதாஸ், “தமிழகத்தின் நிலப் பகுதிகளிலும் கடல் பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்புகள் ஏற்கெனவே விடுக்கப்பட்டுள்ளன. அதற்குத் தமிழக மக்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினர். அதன்பின் அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது.

“இந்நிலை​யில், மத்திய பெட்​ரோலிய அமைச்சின் ஹைட்ரோகார்பன் எடுப்​ப​தற்கான திறந்​தவெளி அனுமதிக் கொள்​கை​யின் 10வது சுற்று ஏல அறிவிப்​பில், தென் தமிழகத்​தின் 9,990.96 சதுர கி.மீ. ஆழ்கடல் பரப்பு இடம்​பெற்றுள்​ளது.

“இத்திட்​டத்​தினால், கடல்​வாழ் உயிரினங்கள் கடும் பாதிப்பைச் சந்திக்​கக்​கூடும். மீன்​வளம் குறை​யும். மீனவர்களின் வாழ்​வா​தாரம் பறிபோகும். காலநிலை மாற்றத்தை அதிகரிக்கும் பசுங்குடில் வாயுக்கள் வெளியேற்றத்தை இத்திட்டம் அதிகமாக்கும்.

“எனவே, இத்திட்​டத்தை மத்திய அரசு ரத்து செய்​வதுடன், அதற்கான ஏல அறி​விப்​பை​யும் உடனடியாக ​திரும்​பப்பெற வேண்​டும்,” என வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்