மதுரை: நடிகர் விஜய்யைப் பார்க்க தவெக கட்சிக்கொடியுடன் சென்ற காவலர் வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் விஜய் நாயகனாக நடிக்கும் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு நடந்து வருகிறது.
அதற்கான படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக, நடிகர் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார்.
விஜய்யைப் பார்க்க, காலை முதலே அவரது கட்சியினர், ரசிகர்கள் மதுரை விமான நிலையப் பகுதியில் திரண்டனர்.
இந்நிலையில், விஜய்யைப் பார்ப்பதற்காக கொடைக்கானலைச் சேர்ந்த கதிரவன் மார்க்ஸ் என்னும் காவலர் பணி நேரத்தில் அனுமதி கேட்டுச் சென்றார்.
பின்னர், காவலர் கதிரவன், சீருடை இல்லாமல் கட்சிக்கொடி உள்ள ஆடையை அணிந்துகொண்டு விஜய்யை வரவேற்றுள்ளார். இதுகுறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவி விமர்சனத்திற்கு உள்ளானது.
அந்தக் காணொளி காவல்துறை ஆணையர் லோகநாதனின் பார்வைக்குச் சென்றதைத் தொடர்ந்து, காவலர் கதிரவன் வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

