சென்னை: தமிழ்நாட்டில் 3 முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கு போடப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பு மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வப்போது நடைபெறும் காவல்துறை கூட்டங்களில் முடிவெடுக்கப்பட்டு சிலருக்கு பாதுகாப்பு வழங்கப்படும், அச்சுறுத்தல் இல்லாதபட்சத்தில் சிலரது காவல்துறை பாதுகாப்பு மீட்டுக்கொள்ளப்படும்.
சம்பந்தப்பட்டவர்களிடம் இதுகுறித்து கேட்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை ஆகிய மூவரின் வீட்டில் இருந்த காவல்துறை பாதுகாப்பு மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


