காவல் ஆய்வாளர், வருமான வரி ஊழியர்கள் கைது

காவல் ஆய்வாளர், வருமான வரி ஊழியர்கள் கைது

1 mins read
6c5e7237-2156-41bc-849e-fa0e63b95f6c
கைது. - படம்: ஊடகம்

சென்னை: சென்னையில் ரூ.20 லட்சம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர், வருமான வரி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது கவுஸ் என்பவரிடம் ரூ.20 லட்சம் பறித்த வழக்கில் நடத்தப்பட்ட விசாரணையில், வருமானவரித் துறை ஊழியர்கள் 3 பேர், ஒரு காவல் உதவி ஆய்வாளர் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாணியம்பாடியைச் சேர்ந்த ஜூனை அகமது என்பவர், தன்னிடம் பணியாற்றும் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது கவுஸ் என்பவரிடம் ரூ.20 லட்சம் பணம் கொடுத்து சென்னைக்குச் சென்று ‘சிடி ஸ்கேன்’ இயந்திரத்தை வாங்கி வருமாறு அனுப்பினார்.

சென்னை வந்த முகமது கவுஸை, சிலர் வழிமறித்து தங்களை காவல்துறையினர் என்று கூறி சோதனை செய்வதுபோல நடித்து பணத்தைப் பறித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணயில், வருமானவரித் துறை ஊழியர்கள் 3 பேர், ஒரு காவல் உதவி ஆய்வாளர் என 4 பேர், முகமது கவுஸை வழி மறித்து பணத்தைப் பறித்துச் செல்வது தெரிய வந்தது.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக நடந்த இந்த வழிப்பறியை நடத்திய நால்வரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்