தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து

1 mins read
7b214ebe-87a5-49f5-aca7-f6d8ac10e46b
முதல்வர் மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

“புத்தாண்டாகிய 2025ல் உலகெங்கும் அமைதி திரும்பட்டும். இந்தியாவில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும். இல்லந்தோறும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கட்டும். தமிழ்நாடு அதற்கு வழிகாட்டும்,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

“தமிழ்நாட்டின் நலன்கள், உரிமைகள் ஆகியவற்றின் மீது படிந்த இருள் விலகி, ஒளி பிறக்க ஆங்கிலப் புத்தாண்டு வகை செய்யட்டும்,” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தமது வாழ்த்துச் செய்தியில், “மக்களின் வாழ்வு ஏற்றம் பெற்று, ஒளிமயமான எதிர்காலம் அமைய புத்தாண்டு வழிவகுக்கட்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்