தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொன்முடி சர்ச்சைப் பேச்சு: காணொளி ஆதாரங்களைச் சமர்ப்பிக்க உத்தரவு

2 mins read
aa01b77e-4011-40bc-90df-d3c6a6c3c588
முன்னாள் அமைச்சர் பொன்முடி. - படம்: ஊடகம்

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடி சைவம், வைணவத்​துடன் பெண்​களை தொடர்​புப்படுத்தி பேசியது சர்ச்சை ஆனது. 

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் திருவாரூர் கே.தங்கராசு நூற்றாண்டு விழா சென்னையில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்ற பொன்முடி, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சில கருத்துகளைப் பேசியிருந்தார்.

அவரது பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் காவல்துறையிடம் 140க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தன. அந்த விவகாரம் பொன்முடியின் அமைச்சர் பதவியைப் பறித்தது.

மேலும், உயர் நீதி​மன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்​கடேஷ் தாமாக முன்​வந்து, பொன்முடி சர்ச்சைப் பேச்சு வழக்கை விசாரணைக்கு எடுத்​தார். 

இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22)  நீதிபதி என்​.சதீஷ்கு​மார் முன்பாக நடைபெற்றது.

அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் முன்னிலையாகி, பொன்​முடிக்கு எதி​ராக அளிக்​கப்​பட்ட அனைத்துப் புகார்​கள் மீதும் விசா​ரணை நடத்​தப்​பட்​டு, குற்​றச்​சாட்​டுக்கு முகாந்​திரம் இல்லை என்​ப​தால் முடித்து வைக்​கப்​பட்​டது எனக்​கூறி அறிக்​கையை தாக்​கல் செய்​தார்.

அப்​போது நீதிப​தி, இந்தப் புகார்​களின் மீது வழக்​குப்​ப​திவு செய்ய முகாந்​திரம் இல்லை என காவல்துறையினர் எப்​படி முடிவுக்கு வந்​தனர் என்று வினவினார்.

காவல்துறையினர்  புகார்​களை முடித்து வைத்​ததை எதிர்த்து, வேண்டுமானால் புகார்தாரர்கள் மனு தாக்​கல் செய்து நிவாரணம் பெறலாம் என்று  அரசு வழக்கறிஞர் பி.எஸ்​.​ராமன் கூறினார்.

மேலும் அவர், “பொன்​முடி தெரி​வித்த கருத்து அவருடைய சொந்தக் கருத்து அல்ல. 1972ஆம் ஆண்டு ஒரு சமூக சீர்​திருத்​த​வாதி தெரி​வித்த கருத்​து. அதைத்​தான் பொன்​முடி​ மேற்​கோள் காட்டிப் பேசி​னார்,” என்​றார்.

அதனைக் கேட்ட நீதிப​தி, “சைவம், வைணவம் மற்​றும் பெண்​கள் தொடர்​பாக பொன்​முடி பேசிய முழு காணொளியையும் அவர் மேற்​கோள் காட்டிப் பேசி​ய​தாகக் கூறப்​படும் 1972ஆம் ஆண்​டுக்​கான ஆதா​ரத்​தை​யும் அரசுத் தரப்​பில் தாக்​கல் செய்ய வேண்​டும் என உத்தரவிட்டு வி​சா​ரணை​யை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்​குத் தள்​ளி வைத்​தார்​.

குறிப்புச் சொற்கள்