தீவிரமாக நடந்து வரும் தவெக மாநாட்டுப் பணிகள்

தீவிரமாக நடந்து வரும் தவெக மாநாட்டுப் பணிகள்

1 mins read
40c23922-4e9e-4734-89c6-8540c0b4cc65
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நிறுவனருமான நடிகர் விஜய். - படம்: இந்திய ஊடகம்

விக்கிரவாண்டி: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாநாட்டுப் பணிகள் அக்டோபர் 4ஆம் தேதியன்று பந்தல்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதனை தொடர்ந்து, மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாநாட்டிற்கு வருகிற தொண்டர்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவற்றை எவ்வித இடையூறுமின்றி வழங்கும் பணிகள் மற்றும் கழிவறை வசதிகளை அமைக்கும் பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

மேலும், மாநாட்டு மேடையை அமைக்கும் பணி திரையுலகக் கலை அரங்க இயக்குனர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்