தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்தைச் சேர்ந்த 21 காவலர்களுக்கு குடியரசுத்தலைவர் விருது

1 mins read
19473e1b-d883-407e-bb51-d3398702adde
அதிபர் திரௌபதி முர்மு. - படம்: ஊடகம்

சென்னை: குடியரசு தினத்தையொட்டி காவல் துறையில் சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் விருது தமிழகத்தைச் சேர்ந்த 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு, ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாக செயல்பட்ட மாநில காவல் அதிகாரிகள், மத்திய ஆயுதப்படை வீரர்கள், ரயில்வே காவல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்படும். இந்தாண்டு நாடு முழுவதும் 746 விருதுகள், பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் தமிழகத்தில் 2025ஆம் ஆண்டு காவல்துறையில் சிறப்பாக செயல்பட்டதற்கான விருது காவல் ஆய்வாளர்கள் துரைக்குமார், ராதிகா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறந்த சேவைக்கான விருது, காவல் கண்காணிப்பாளர்கள் ஜெயலட்சுமி, ஸ்டாலின், கூடுதல் கண்காணிப்பாளர்கள் தினகரன், பிரபாகரன், துணை ஆணையர் வீரபாண்டி, இணை காவல் கண்காணிப்பாளர்கள் மதியழகன், பாபு உள்ளிட்ட 21 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்