தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவவர் வெள்ளையன் காலமானார்

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவவர் வெள்ளையன் காலமானார்

1 mins read
2ba2dae8-293b-4713-bb29-961422b24634
வெள்ளையன். - படம்: ஊடகம்

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் காலமானார். அவருக்கு வயது 76.

நுரையீரல் தொற்று காரணமாக அவர் கடந்த 3ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை அவர் காலமானார்.

வணிகர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் வணிகர் சங்கத்தை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டார் என வணிகர்கள் பலர் சமூக ஊடகங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும், பல முக்கியப் பிரமுகர்களும் வெள்ளையன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்