புழல் சிறையில் போதைப் பொருள் புழக்கம்: அமைச்சர் விளக்கம்

புழல் சிறையில் போதைப் பொருள் புழக்கம்: அமைச்சர் விளக்கம்

1 mins read
0b54cd7c-75b4-4c0b-aa3a-ad9fdc2cdf99
புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நிர்மல் குமார், கைதிகளுக்கு குடிநீர், மருத்துவ வசதி, சட்ட உதவி உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: புழல் சிறையில் போதைப் பொருள், கைப்பேசிகள் பயன்படுத்த முடியாத அளவிற்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

புழல் சிறையில் தடை செய்யப்பட்ட பொருள்கள் பயன்படுத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து, அவர் ஞாயிற்றுக்கிழமை (மே 24) அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஏறக்குறைய மூன்று மணிநேரம் நீடித்த இந்த ஆய்வின்போது, கைதிகளின் குறைகளை நிர்மல் குமார் கேட்டறிந்தார்.

புழல் சிறையில் போதைப்பொருள், கைப்பேசிப் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், தடையை மீறி அவை புழக்கத்தில் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகின்றன.

இதையடுத்து, காவல்துறை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பொருள்களைக் கைப்பற்றுவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நிர்மல் குமார், கைதிகளுக்குக் குடிநீர், மருத்துவ வசதி, சட்ட உதவி உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

“புழல் சிறையில் போதைப் பொருள்கள் பயன்படுத்த முடியாத அளவிற்குப் பாதுகாப்பாக உள்ளது. சிறைவாசிகளையும் பார்வையாளர்கள் கொண்டு வரும் பொருள்களையும் ‘ஸ்கேன்’ செய்யும் வசதிகள் உள்ளன.

“போதைப் பொருள்கள் உட்பட தடை செய்யப்பட்ட எதுவும் சிறைக்குள் நுழைந்துவிட முடியாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்,” என்றார் நிர்மல் குமார்.

குறிப்புச் சொற்கள்