திருவாரூர்: கோயில் நிலமீட்பு நடவடிக்கைக்கு எதிராகப் போராட்டம்

திருவாரூர்: கோயில் நிலமீட்பு நடவடிக்கைக்கு எதிராகப் போராட்டம்

1 mins read
2fc79b8d-4fe3-43ee-874c-f513226f8d06
கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வந்த கிராம நிர்வாகிகளை அரசியல்வாதிகளும் விவசாயிகள் சங்கமும் விரட்டியடித்தர். - படம்: இந்து தமிழ் திசை

திருவாரூர்: ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை கோயில் நிர்​வாகத்​தின் கீழ் கொண்டு வரவேண்​டும் என்​று கூறி, சென்​னையைச் சேர்ந்த வழக்​கறிஞர் ஜெகன்​னாத் என்​பவர் கடந்த 2020ஆம் ஆண்​டு, சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்​தார்.

பல ஆண்டுகளாக இவ்​வழக்கு நடை​பெற்று வந்த நிலை​யில், ஆக்கிரமிப்பு நிலங்​களை தனியாரிடம் இருந்து மீட்க வேண்​டும் என்று உயர்​நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டது. ஆனால், பல்​வேறு காரணங்​களாலும், பொது​மக்​கள் எதிர்ப்​பாலும் இப்​பணி தாமதமானது.

இதையடுத்​து, நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கை விசா​ரித்த உயர்​நீ​தி​மன்​றம் 21 நாள்​களுக்​குள் கோயில் நிலங்​களை மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்​தர​விட்​டது.

இதைத் தொடர்ந்​து, அறநிலை​யத் துறை இணை ஆணை​யர் குமாரதுரை, உதவி ஆணை​யர்​கள், அறநிலை​யத்​துறை செயல் அலு​வலர் குமர​வேல் ஆகியோர் அடங்​கிய குழு​வினரும், வரு​வாய்த்​துறை கூடு​தல் வட்​டாட்​சி​யர் பார்​வதி மற்​றும் வரு​வாய் ஆய்​வாளர்​கள், கிராம நிர்​வாக அலு​வலர்​கள் அடங்​கிய குழு​வினரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தில் கோயில் நிர்​வாகத்​தின் பெயர்ப் பலகையை வைக்க முற்​பட்​ட​போது விவ​சாய நிலங்​களை குத்​தகைக்கு எடுத்​திருந்​தவர்​கள், நிலங்​களை அனுப​வித்து வருபவர்​கள், பொது​மக்​கள், விவ​சா​யிகள், அரசி​யல் கட்​சி​யினர், தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கத்​தினர் உள்​ளிட்ட பல்​வேறு தரப்​பினர் திரண்டு வந்து தடுத்து நிறுத்​தியதோடு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்