சென்னை: மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு உரிமம் வழங்கியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் தலையிட்டு, உடனடியாக பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும் என அவருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
“இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய மத்திய சுரங்கத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்.
“சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்கம் தோண்டுவதற்கான ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்று சுரங்க அமைச்சுக்கு அறிவுறுத்த வேண்டும்,” என முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளார்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசியல் கட்சிகளும் பல்வேறு இயக்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

