மதுரை: தமிழ்நாட்டின் மதுரை விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.
அதற்காக, அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இடம் கொடுத்த சின்ன உடைப்பு கிராம மக்கள் மாநகராட்சி எல்லைக்குள் தங்களுக்கு வீடு கட்டித் தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, சின்ன உடைப்பு பகுதியில் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது என்று தந்தி போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வீடுகளைக் காலி செய்ய ஆறு நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தினால் பணம் மட்டுமே கொடுக்க முடியும்; மாற்று இடம் கொடுக்க முடியாது என்று மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

