சென்னை: சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் நடவடிக்கையின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2.59 கோடி இழப்பீட்டுத் தொகையை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டை நடந்தபோது விசாரணை என்ற பெயரில் மலைக் கிராம மக்கள் பலர் துன்புறுத்தப்பட்டனர். இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், மனித உரிமை மீறல்கள் நடந்ததாக தேசிய மனித உரிமை ஆணையத்திடம் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன.
அவற்றின் மீதான விசாரணைக்குப் பின்னர், புகாரின் அடிப்படையில் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க ஆணையிடப்பட்டது.
இரண்டு தவணை இழப்பீட்டுத்தொகை விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது நிலுவைத்தொகை விடுவிக்கப்பட்டது.

