தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புனே: கைப்பேசி, வாகனத் திருட்டுக் கும்பல்கள் சிக்கின

1 mins read
d9d7e36f-2b23-41d8-bd3f-935e79150a1f
புனேயில் கைப்பேசிகளைத் தட்டிப்பறித்துச் செல்லும் 2 கும்பல்கள் சிக்கியுள்ளன. - படம்: ஊடகம்

புனே: கைப்பேசிகளை பறித்துச் செல்லுதல், வாகனங்களைத் திருடிச் செல்லுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த இரண்டு பெரிய கும்பல்களை புனே காவல்துறை வளைத்துப் பிடித்துள்ளது. அவர்களிடம் இருந்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கைப்பேசிகள், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள் போன்றவற்றை காவல்துறை கைப்பற்றியது.

புனேயின் கொரேகோன் பூங்கா பகுதியில் நடமாடும் மக்களிடம் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, அவர்களிடம் இருந்து கைப்பேசிகளைப் பிடுங்கிச் செல்லும் குற்றச் செயல்கள் குறித்துக் காவல்துறைக்கு அதிகமான புகார்கள் வந்தன. அதையடுத்து, காவல்துறை தனிப்படை அமைத்து, குற்றவாளிகளைத் தேடி வந்தது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) காவல்துறையினர் நடத்திய அதிரடித் தேடுதல் வேட்டையின்போது குவீன்ஸ் கார்டன் ரயில்வே பகுதியில் சந்தேகத்தின்பேரில் சுற்றித்திரிந்த நான்கு பேரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது தப்பியோட முயன்ற அவர்களை காவலர்கள் கைது செய்தனர். அவர்களில் ஒருவன் சிறுவன்.

இன்னொரு சம்பவத்தில், வான்வாடி என்னுமிடத்தில் மூன்று கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்