சென்னை: நீதிமன்றத்தில் பிணை பெற்று வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மீண்டும் அமைச்சராக அதிகாரம் செலுத்தும்போது தமக்கு எதிரான வழக்கின் சாட்சிகளை கலைக்க மாட்டாரா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து ராமதாஸ் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், செந்தில் பாலாஜியை அமைச்சராக்குவதற்கு சட்டப்படியாக எந்த தடையும் இல்லை; ஆனால், அவருக்கு தார்மீகத் தகுதி இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைத்து விடுவார் என்பதைக் காரணம் காட்டித் தான் அவருக்கு தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து தான் அவர் பதவியிலிருந்து விலகினார். அவரால் இப்போது மட்டும் சாட்சிகளைக் கலைக்க மாட்டாரா?” என ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

