இக்கட்டான சூழலில் நண்பர் ஸ்டாலினைச் சந்தித்த ரஜினி

இக்கட்டான சூழலில் நண்பர் ஸ்டாலினைச் சந்தித்த ரஜினி

1 mins read
1666f65e-6f35-42f8-b97d-d9a30b1742b8
தனது நீண்டகால நண்பருக்கான ஆதரவை ரஜினி வெளிப்படுத்தியதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. - கோப்புப் படம்: sambadenglish

சென்னை: தமிழக அரசியல் களம் அடுத்தடுத்து பரபரப்​பான திருப்பங்களைக் கண்டுவரும் சூழலில், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

அப்போது, தனது நீண்டகால நண்பருக்கான ஆதரவை ரஜினி வெளிப்படுத்தியதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

புதன்கிழமை (மே 6) சந்தித்தபோது, “எனது நெருங்​கிய நண்​ப​ரான தங்​களின் வெற்றி நேரத்​தில் மட்​டுமல்லாமல், இக்​கட்​டான சூழ்​நிலை​யிலும் உங்​களு​டன் இருப்​பேன்,” என்று ஸ்டாலினிடம், ரஜினி​காந்த் தெரி​வித்​த​தாக​வும் ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே தி​முக தலை​வர் மு.க.ஸ்​டா​லினை, தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா, மனிதநேய ஜனநாயகக் கட்​சித் தலை​வர் தமி​முன் அன்​சாரி உள்​ளிட்​டோரும் சென்​னை​யில் உள்ள அவரது இல்​லத்​தில் நேற்று சந்​தித்து வாழ்த்​துப் பெற்​றனர்.

இதையடுத்துச் செய்​தி​யாளர்​களிடம் பேசிய திரு அன்சாரி, தமக்கு வாக்​களித்த மக்​களுக்கு நன்​றி தெரி​விப்பதாகக் கூறினார்.

“என் வெற்​றிக்கு திரு ஸ்டா​லின்​தான் காரணம். அவரைச் சந்​தித்து வாழ்த்து பெற்​றேன்.

“அப்​போது நீங்​கள் மீண்​டும் சட்​டப்​பேர​வைக்கு வர வேண்​டுமென கூறினேன். இதற்​காக நான் வெற்றி பெற்ற சிதம்​பரம் தொகு​தி​ எம்எல்ஏ பதவியைக்கூட ராஜி​னாமா செய்​கிறேன் என்​றேன். ஆனால் அவரோ, அப்​படி​யெல்​லாம் பேசக்​கூ​டாது எனக் கூறி​விட்​டார்,” என்றார் திரு தமிமுன் அன்சாரி.

குறிப்புச் சொற்கள்