சென்னை: தியானம் செய்யத் தொடங்கியதில் இருந்து தனக்குள் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
அந்த அனுபவங்களை விவரிக்க தமக்குத் தெரியவில்லை என்றும் கடந்த 21 ஆண்டுகளாக ஒழுக்கத்துடன் தொடர்ந்து தியானம் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அண்மையில் ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் உள்ள பரமஹம்ச யோகானந்தா ஆசிரமத்துக்குச் சென்று தியானப் பயிற்சி மேற்கொண்டுள்ளார் ரஜினி.
அங்கு தாம் இரண்டு நாள்கள் தங்கியிருந்ததாகவும் அப்போது ஆசிரமக் குருவின் அறையில் அமர்ந்து தியானம் செய்ய வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தியானம் செய்யத்தொடங்கிய பிறகு மனதில் ஒருவித அமைதி நிலவியது. தொடக்கத்தில் எனக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை. இதனால் தியானத்தின் மீது சந்தேகம் எழுந்தது. ஆனால் 10, 12 ஆண்டுகளுக்குப் பிறகே மாற்றங்கள் தெரிந்தன,” என்றார் அவர்.
எப்போதும் அமைதியும் ஒருவித நிம்மதியான மனநிலையும் வாய்த்தன என்று காணொளி ஒன்றில் ரஜினிகாந்த் தனது ஆன்மிக அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.