ரஜினிகாந்த், சீமான் திடீர் சந்திப்பு

1 mins read
eefa3269-8d93-4a23-88e5-b4ed6720bcf4
போயஸ் தோட்டத்தில் ரஜினியை சந்தித்துப் பேசினார் சீமான். - படம்: ஊடகம்

சென்னை: நடிகர் ரஜினிகாந்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்தார்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என நாம் தமிழர் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 2ஆம் தேதியே ரஜினியைச் சந்திக்க சீமான் அனுமதி கேட்டிருந்ததாகவும் பல்வேறு காரணங்களால் அச்சந்திப்பு தள்ளிப் போனதாகவும் கூறப்படுகிறது.

விஜய் ரசிகர்களும் நாம் தமிழர் கட்சியினரும் அண்மைக்காலமாக சமூக வலைத்தளப் பதிவுகள் மூலம் தொடர்ந்து ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இச்சூழலில் ரஜினியை திடீரென சீமான் நேரில் சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்