ராமேஸ்வரம்: உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா; இருவர் கைது

1 mins read
f1918a16-bcc2-4b99-b31e-2aafc0f3940c
கைதான இரு ஆடவர்கள். - படம்: இந்திய ஊடகம்

ராமேசுவரம்: ராமேசுவரம் கடலில் நீராடிய பின்னர், கடற்கரைக்கு எதிரே உள்ள தனியாருக்குச் சொந்தமான ஒரு கட்டடத்தில் பெண்களுக்கான உடைமாற்றும் அறை உள்ளது. அந்த அறையில் உடை மாற்றச் சென்ற ஒரு பெண், அங்கு ஒரு கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு திடுக்கிட்டார். உடனே இதுகுறித்து அந்தப் பெண், அவருடைய தந்தையிடம் கூறினார். உடனே காவல்துறையில் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து அங்கு வேலை செய்த ராஜேஷ் கண்ணன் (34 வயது), மீரான் மைதீன் (38 வயது) ஆகியோரை ராமேசுவரம் காவலர்கள் கைது செய்தனர். உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து பெண்களைப் படம் பிடித்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அங்கு உடைமாற்றுவதற்காக வந்த ஏராளமான பெண்களை இவர்கள் படம் பிடித்து உள்ளதால் அதுதொடர்பான காணொளிகளை வைத்து யாரையும் மிரட்டினார்களா அல்லது வலைத்தளங்களிலோ, வேறு யாருக்கும் பகிர்ந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்