சென்னை: ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரையை உடனே அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மார்ச் 1ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகக் குடும்பப் பங்கீட்டு அட்டை வைத்துள்ளோருக்கான மலிவு விலைக் (ரேஷன்) கடை ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, பல்வேறு சங்கத்தினரும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினரின் சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்த அரசு, அவர்களது போராட்டத்தை முடித்து வைத்தது.
அதைப் பின்பற்றி தற்போது ‘ரேஷன்’ கடை ஊழியர்கள் சங்கமும் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

