‘விஜய் அழைத்தால் அவரது கட்சியில் சேர நான் தயார்’

1 mins read
6b34cd38-9068-45cf-8406-85f3de3f9990
நிகழ்ச்சி ஒன்றில் பேசும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தம்மை அழைத்தால் அவரது கட்சியில் சேர தாம் தயார் என நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

அறிமுக இயக்குநர் நவீன் குமார் எழுதி இயக்கும் ‘கடைசி தோட்டா’ படத்தில் நடித்துள்ள ராதாரவி, அப்படம் தொடர்பான விழா ஒன்றில் அண்மையில் கலந்துகொண்டு பேசியபோது மேற்கண்ட கருத்தைக் கூறினார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை வரவேற்றுள்ள ராதாரவி, “அவர் என்னை அழைத்தால் நிச்சயம் நான் அவருடன் இணைவேன்,” என உறுதிப்படச் சொன்னார்.

தற்போது தாம் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திய அவர், திரையுலகில் தமது நடிப்புப் பயணம் தொடரும் என்றார்.

“சினிமாவில் எனக்கு இது 50வது ஆண்டு. நான் இதையும் தாண்டி நடித்துக் கொண்டிருப்பேன். நடிகன் என்பவன் இறந்தும் நடிப்பவன். அவன் இறப்பு வீடியோவை வெளியிட்டு பணம் சம்பாதிக்கிறார்கள் அல்லவா? அதேபோல் அவன் இறந்தாலும் அவன் நடித்த கதாபாத்திரங்களும் காட்சிகளும் அடிக்கடி ரசிகர்கள் கண்முன் வந்துகொண்டுதான் இருக்கும்,” என்று ராதாரவி கூறினார்.

குறிப்புச் சொற்கள்