புரட்சி ஏற்படுத்திய சின்னப்பிள்ளை; காலில் விழுந்த பிரதமர்

புரட்சி ஏற்படுத்திய சின்னப்பிள்ளை; காலில் விழுந்த பிரதமர்

1 mins read
146c5357-be36-48ee-9862-119f5af266b2
முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாய், விருது மேடையில் சின்னப்பிள்ளை காலில் விழுந்து ஆசி பெற்றார். - கோப்புப்படம்: ஊடகம்

புரட்சி ஏற்படுத்திய சின்னப்பிள்ளை; காலில் விழுந்த வாஜ்பாய்

மதுரை மாவட்டம், கள்ளந்திரி கிராமத்தைச் சேர்ந்த சின்னப் பிள்ளையைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘பெயர் சிறிது; செயல் பெரிது’ - என்றுதான் சொல்ல வேண்டும்.

சின்னப்பிள்ளை - பெருமாள் தம்பதியர்க்கு இரண்டு ஆண் குழந்தைகள். நோய்வாய்ப்பட்டு மிக இளம் வயதிலேயே கணவர் இறந்துவிட, சின்னப்பிள்ளையின் தந்தையும் இறந்துபோனார். இதனால் விவசாய கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.

படிப்பறிவோ எழுத்தறிவோ இல்லாத சின்னப்பிள்ளைக்கு, அனுபவ அறிவு கைகொடுத்தது.

சம்பாதித்தோம்.... சாப்பிட்டோம்... என வாழ்ந்த தன் கணவரின் பில்லுசேரி மற்றும் தனக்குத் தெரிந்த கிராமப்புறப் பெண்களிடையே சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தி மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கினார். ‘களஞ்சியம்’ என்பது இந்தக் குழுவின் பெயர்.

இக்குழு பெண்களின் வாழ்க்கையில் பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்று 15 இந்திய மாநிலங்களில் களஞ்சியம் குழு செயல்பட்டு வருகிறது.

சின்னப்பிள்ளையின் சேவையைப் பாராட்டி ‘ஸ்திரி சக்தி புரஸ்கர்’ என்னும் விருது இந்திய அரசால் அளிக்கப்பட்டது. 1999ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் வாஜ்பாய், விழா மேடையில், தன்னைவிட வயதில் சிறியவரான சின்னப்பிள்ளையின் கால்களில் விழுந்து வணங்கினார்.

தமிழக அரசின் ஒரு லட்ச ரூபாய் பொற்கிழி, பத்மஸ்ரீ விருது ஆகியவற்றையும் பெற்றார் சின்னப்பிள்ளை.

குறிப்புச் சொற்கள்