தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருமாவளவன் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

1 mins read
4a09117c-11c2-446d-b715-72880a23183e
முதல்வர் ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன். - கோப்புப் படம்

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பதை ஒட்டி விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்று அறிவித்ததுடன் அதற்கு பானை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை அடுத்து, தேர்தல் ஆணையம் இந்த அங்கீகாரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அளித்துள்ளது.

இந்நிலையில், இதனையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விசிகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். அன்புச் சகோதரர் திருமாவளவனின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதை எண்ணிப் பாராட்டுகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி பானை சின்னம் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்