தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னையில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு அடைக்கலம்

2 mins read
25c9d3f1-52d1-435c-bb4d-546471ff8f08
சென்னைச் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் நடக்கும் விபத்துகளைத் தடுத்த சென்னை மாநகராட்சி சென்னையில் பல மாட்டுக் கொட்டகைகளை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: சென்னை மாநகரல் சாலைகளில் சுற்றித்திரியும் ஆதரவற்ற மாடுகளுக்காக பல இடங்களில் கொட்டகைகளைக் கட்ட சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் சாலை விபத்துகளும் மாடு முட்டி நடையர்கள் காயமடையும் சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அதைக் கட்டுப்படுத்தும் வகையிலும் மாடுகளுக்கென கொட்டகைகளை அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரு​வல்​லிக்​கேணி​யில் மாடு முட்​டிய​தில் முதி​யவர் ஒருவர் உயிரிழந்​தார்.

அதனைத் தொடர்ந்து மாநக​ராட்சி சார்​பில் இரவு நேரங்​களில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்​கும் நடவடிக்கை​யும் எடுக்​கப்​பட்​டது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் 4,237 மாடுகளைப் பிடித்து, ரூ.92 லட்சத்து 4 ஆயிரத்து 700 அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது.

2024ஆம் ஆண்டு 2,427 மாடுகள் பிடிக்​கப்​பட்டு, ரூ.1 கோடியே 30 லட்சத்து 71 ஆயிரம் அபராதம் வசூலிக்​கப்​பட்​டுள்​ளது.

கடந்த ஆண்டு, முதல்​முறை பிடிபடும் மாடு​களுக்கு ரூ.5 ஆயிரத்​திலிருந்து ரூ.10 ஆயிர​மாக​வும், 2-வது முறையாக பிடிபடும் மாடு​களுக்கு அபராதத் தொகை ரூ.10 ஆயிரத்​தில் இருந்து ரூ.15 ஆயிர​மாக​வும் மாநக​ராட்சி உயர்த்தி​யது.

முதல்​முறை பிடிபடும் கால்​நடைகளை அடையாளம் காண கால்​நடைகளின் உடலில் சிப் பொருத்​த​வும் சென்னை மாநகராட்சி திட்​ட​மிட்​டிருந்​தது.

இருப்​பினும் மாடுகள் சாலை​யில் சுற்றி திரிவது தொடர்ந்​தது. அவற்றைப் பிடிப்பதும் அவ்வளவு எளிதானதாக இல்லை.

இந்நிலை​யில் கால்நடை வளர்ப்​போர், மாடுகளைக் கட்டுவதற்கு இடமில்லை என்ற

கோரிக்கையை ஏற்று மாநக​ராட்சி சார்​பில் 15 இடங்​களில் மாட்டுக் கொட்​டகைகள் அமைக்​கப்​பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்