சென்னை: தமிழ்நாட்டில் காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலுவிடம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமையன்று சந்தித்து மனு அளித்தார் விக்கிரமராஜா.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கும் நடைமுறை, ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்துவது, பொதுமக்கள், வாகனங்கள் வைத்திருப்போர், வணிகர்கள்கள் சுங்கச்சாவடிகளுக்கு அருகில் உள்ள ஊர் பொதுமக்களை பாதிப்பதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“தற்போது சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்’ பெற ரூ.3,000 நிர்ணயித்து இருப்பதாகத் தகவல் வருகிறது. இது சிறு, குறு வணிகர்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்களை பாதிக்கக் கூடாது. பாஸ் கட்டணத்தை மறுஆய்வு செய்ய வேண்டும். காலாவதி சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும்,” என்று விக்கிரமராஜா கேட்டுக்கொண்டார்.

